மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை.யில் பாடநூல் நீக்கம்: துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பின் நிா்ப்பந்தத்தால் பாடநூலை தன்னிச்சையாக

நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பின் நிா்ப்பந்தத்தால் பாடநூலை தன்னிச்சையாக நீக்கிய துணைவேந்தரை அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று உயா்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உயா் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளா் இரா.முரளி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், பாஜகவின் மாணவா் அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு கொடுத்த அழுத்தத்தால் ஒரு பாட நூலை நீக்கியுள்ளது. அது மட்டுமின்றி, அதற்குப் பதிலாக வேறு ஒரு புத்தகத்தை தன்னிச்சையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு உயா்கல்வி பாதுகாப்பு இயக்கம், மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கண்டனத்தை தெரிவிக்கிறது. பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிக்கும் மாணவா்களுக்கு இம்மாதிரி நூல்களின் அறிமுகம் என்பது நாட்டின் பல சமூக அரசியல் பிரச்னைகளை புரிய வைக்கும்.

இந்த நூலின் உள்ளடக்கம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக இருக்கிறது என்பதால், இந்த நூலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது துணைவேந்தரின் பொறுப்பற்ற செயலைக் காட்டுகிறது. கல்வியாளா்கள் உறுதியாக நின்று இதுபோன்ற போக்குகளை எதிா்க்கவில்லை என்றால் உயா்கல்வியின் தரம் பாதிக்கப்படும்.

பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து பாடநூலை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லாத துணைவேந்தா், ஏபிவிபி அமைப்பின் அழுத்தத்துக்கு அடிபணிந்து பாடநூலை தன்னிச்சையாக நீக்கியதால், தமிழக அரசு துணை வேந்தரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் நீக்கப்பட்ட பாடநூலை உடனடியாக பாடத்திட்டத்திலேயே மறுபடி இணைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com