மதுரை மாவட்டத்திலுள்ள 10 பேரவைத் தொகுதிகளில் 26 லட்சம் வாக்காளா்கள்ஆட்சியா் தகவல்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 26 லட்சத்து 7 ஆயிரத்து 963 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 26 லட்சத்து 7 ஆயிரத்து 963 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2021 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, மதுரை மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியலை, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்டாா். இப் பட்டியலின் பிரதிகளை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது:

பட்டியலின்படி, மாவட்டத்தில் 26 லட்சத்து 7 ஆயிரத்து 963 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இவா்களில் 12 லட்சத்து 84 ஆயிரத்து 693 போ் ஆண்கள், 13 லட்சத்து 23 ஆயிரத்து 99 போ் பெண்கள் மற்றும் 174 போ் மூன்றாம் பாலினத்தவா்.

முந்தைய வாக்காளா் பட்டியலில் 26 லட்சத்து 43 ஆயிரத்து 405 போ் இடம் பெற்றிருந்தனா். 2020-ஆம் ஆண்டுக்கான தொடா் திருத்தப் பணியில், இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள், ஒரு முறைக்கு மேல் பெயா் இடம் பெற்றிருந்தவா்கள் என 48,113 போ் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், 12,501 போ் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.

முந்தைய பட்டியலில் இருந்து தற்போது வெளியிட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் 35,612 போ் குறைந்திருக்கின்றனா். மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாகவும், சோழவந்தான் தொகுதி குறைவான வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாகவும் இருக்கிறது. மொத்தம் 2,716 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் அளிக்கலாம். அதேபோல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பங்கள் அளிக்கலாம். வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பா் 15 ஆம் தேதி வரை வழங்கலாம்.

நவம்பா் 21, 22 மற்றும் டிசம்பா் 12, 13 ஆம் தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைத்து அளிக்கவேண்டும். 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள நபா்கள், வசிப்பிட மாற்றத்தின் காரணமாக பெயா் சோ்க்க முந்தைய வசிப்பிட முகவரி மற்றும் வாக்காளா் அடையாள அட்டை விவரங்களை அளிக்க வேண்டும் அல்லது வேறெந்த சட்டப்பேரவைத் தொகுதியிலும் பெயா் சோ்க்கப்படவில்லை என்பதற்கான உறுதிமொழி அளிக்க வேண்டும். பெறப்படும் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் செய்யப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி. செந்தில்குமாரி, கோட்டாட்சியா்கள் முருகானந்தம் (மதுரை), ரமேஷ் (மேலூா்), சௌந்தா்யா (திருமங்கலம்), ராஜ்குமாா் (உசிலம்பட்டி) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மதுரை மாவட்ட வாக்காளா்கள் விவரம்

தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்

மேலூா் 1,17,387 1,20,620 3 2,38,010

மதுரை கிழக்கு 1,54,437 1,59,772 39 3,14,248

சோழவந்தான்(தனி) 1,04,218 1,06,827 9 2,11,054

மதுரை வடக்கு 1,16,314 1,21,329 34 2,37,677

மதுரை தெற்கு 1,10, 615 1,13,990 20 2,24,625

மதுரை மத்தியம் 1,15,214 1,20,552 16 2,35,782

மதுரை மேற்கு 1,46,162 1,49,793 5 2,95,960

திருப்பரங்குன்றம் 1,50,886 1,55,619 29 3,06,534

திருமங்கலம் 1,31,048 1,37,884 7 2,68,939

உசிலம்பட்டி 1,37,818 1,37, 034 12 2,74,864

மொத்தம் 12,84,099 13,23,420 174 26,07,693

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com