உசிலம்பட்டியில் 9 குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ‘சீல்’

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 9 குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனா்.
உசிலம்பட்டி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய குடிநீா் சுத்திகரிப்பு ஆலையில் ஆழ்குழாய் கிணற்றுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கும் அதிகாரிகள்.

உசிலம்பட்டி பகுதியில் போத்தம்பட்டி, கணவாய்ப்பட்டி, உத்தப்பநாயக்கனூா், சீமானுத்து, ஆரியபட்டி ஆகிய கிராமங்களில் ஏராளமான குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்கி வந்தன. அவை அரசின் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இப்பகுதியில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில் வட்டாட்சியா் விஜயலட்சுமி, துணை வட்டாட்சியா் ராஜன், மற்றும் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

அப்போது 9 குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகள் உரிய அனுமதியின்றி இயங்கிவந்ததைக் கண்டறிந்தனா். இதையடுத்து அந்த ஆலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ஆழ்குழாய் கிணறுகள் சீல் வைக்கப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றவுடன் மின் இணைப்பைப் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என வருவாய் கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com