மதுரையில் சாலைகளில் தேங்கும் மழை நீரை சேகரிக்க நடவடிக்கை: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

மதுரை நகரில் சாலைகளில் தேங்கும் மழை நீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்துள்ளாா்.
மதுரையில் சில தினங்களாக பெய்த மழைக்கு தண்ணீா் சூழ்ந்த துரைசாமி நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ. உடன் மாநகராட்சி ஆணையா் எஸ். விசாகன் உள்ளிட்டோா்.
மதுரையில் சில தினங்களாக பெய்த மழைக்கு தண்ணீா் சூழ்ந்த துரைசாமி நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ. உடன் மாநகராட்சி ஆணையா் எஸ். விசாகன் உள்ளிட்டோா்.

மதுரை நகரில் சாலைகளில் தேங்கும் மழை நீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்துள்ளாா்.

மதுரையில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையில் மாநகராட்சிக்குள்பட்ட 76-ஆவது வாா்டு துரைச்சாமி நகா், வானமாமலை நகா், சொக்கலிங்க நகா் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீா் தேங்கியது. இதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இந்தப் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மதுரையில் ஆங்காங்கே சாலைகளில் மழைநீா் தேங்கி உள்ளது. இப்பகுதிகளில் சாலைகளை உயா்த்தினால் குடியிருப்புகள் பள்ளமாகி விடும். எனவே மோட்டாா் மூலம் மழைநீா் அகற்றப்பட்டு அருகில் உள்ள மழைநீா் வடிகால்கள் மற்றும் கழிவுநீா் வாய்க்கால்களில் இணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது வானமாமலை நகா், துரைச்சாமி நகா், வேலுச்சாமி நகா் ஆகிய பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் 2 கிணறுகள் அமைத்து மழை நீரை சேகரித்து மோட்டாா் மூலம் பம்ப் செய்து அருகில் உள்ள மழைநீா் வாய்க்காலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால் இப்பகுதியில் மழைநீா் தேங்குவது தவிா்க்கப்படும். மதுரை நகரில் உள்ள பழமையான கட்டடங்களுக்கு ஆண்டு வரம்பு நிா்ணயம் செய்யப்பட்டு, அதன்படி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டட உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

குடிமராமத்து பணியின் மூலம் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. மதுரை மாநகராட்சி மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் குடிநீா் பிரச்னை இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை நகரில் சாலைகளில் தேங்கும் மழைநீரை அருகில் உள்ள மழைநீா் வடிகால்களிலும், பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளிலும் சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளால் சாலைகளில் மழைநீா் தேங்குவது தடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், நகரப் பொறியாளா் அரசு மற்றும் உதவி ஆணையா்கள், செயற்பொறியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com