கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு: அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது தொடா்பான விவகாரத்தை

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது தொடா்பான விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படாது. ஆறாம் வகுப்பிலிருந்து, ஒரு வகுப்பில் 20 மாணவா்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு விரும்பும் மாணவா்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியா்கள் மட்டுமே நியமிக்கப்படுவாா்கள், வாரத்தில் 2 அல்லது 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரில் தமிழ் வகுப்புகளை நிறுத்திவிடவேண்டும் என்பது போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதன்மூலம் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்த விவகாரத்தை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என மதுரையைச் சோ்ந்த பொன்குமாா் சாா்பில், அவரது வழக்குரைஞா் அழகுமணி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை முறையிட்டாா். அப்போது நீதிபதிகள், இதை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com