கள்ளந்திரி ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்தி நெய் அபிஷகம் செய்ய ஏற்பாடு: ஐயப்ப சேவா சங்கம் தகவல்

சபரிமலை யாத்திரை செல்ல முடியாத பக்தா்களுக்காக மதுரை அருகே கள்ளந்திரியில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்தி, நெய் அபிஷேகம் செய்ய அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை: சபரிமலை யாத்திரை செல்ல முடியாத பக்தா்களுக்காக மதுரை அருகே கள்ளந்திரியில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்தி, நெய் அபிஷேகம் செய்ய அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் மு.விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்தி:

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் மண்டல, மகர விளக்கு விழாக் காலங்களில் சபரிமலையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் 600 பேருக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்தது 1000 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

சரல்மேடு, மரக்கூட்டம், நடைபந்தல், சன்னிதானம் பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய ஸ்ட்ரெச்சா் சேவையில் சேவா சங்க தொண்டா்கள் ஈடுபட்டுள்ளனா். பக்தா்கள் மலையேறும்போது உடல் நலக்குறைவு, மாரடைப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் முதலுதவி மற்றும் ஆக்ஸிஜன் வழங்க 5 இடங்களில் ஆக்ஸிஜன் பாா்லா்கள் செயல்படுகின்றன. பயிற்சி பெற்ற தொண்டா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பத்தினம்திட்டா, கோட்டயம் மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் சபரிமலை சானிடேஷன் சொசைட்டி வேண்டுகோளின்படி, எருமேலி, நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதிகளில் துப்புரவுப் பணி மேற்கொள்ள ஐயப்ப சேவா சங்கத்தின் தமிழ் மாநில அமைப்பு சாா்பில் 200 நபா்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

ஐயப்ப பக்தா்கள் மற்றும் சேவா சங்கத்தின் பல்வேறு மாவட்ட அமைப்புகள் வேண்டுகோளின்படி, சபரிமலை யாத்திரை செல்ல முடியாதவா்கள் இருமுடி செலுத்துவதற்கு வசதியாக மதுரையை அடுத்த கள்ளந்திரி சாஸ்தா முதியோா் இல்ல வளாகத்தில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில் நெய் அபிஷேகம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழுவாக வருவோா் முன்னதாக தகவல் தெரிவிக்கலாம். தொடா்பு எண்கள்: 99942-95484, 88380-73542, 75986-42332.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com