வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்: அஞ்சல்துறை ஏற்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை பக்தா்கள் தபால் மூலம் பெறலாம் என மதுரை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.லெட்சுமணன் தெரிவித்துள்ளாா்.

மதுரை: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை பக்தா்கள் தபால் மூலம் பெறலாம் என மதுரை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.லெட்சுமணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

கரோனா காலம் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கோயிலுக்கு வருவோா் ஆன்-லைனில் முன்பதிவு செய்யவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த அளவிலான ஐயப்பப் பக்தா்கள் மட்டுமே மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனா்.

இதனைக் கருத்தில் கொண்டு அஞ்சல்துறை, திருவிதாங்கூா் தேவஸ்தானத்துடன் இணைந்து பக்தா்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு அருகில் உள்ள அஞ்சலங்களில் ரூ.450 செலுத்தி முன்பதிவு செய்தால் அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி, அா்ச்சனை பிரசாதம் உள்ளிட்டவைகள் கொண்ட ஐயப்பன் கோயில் பிரசாதப் பை 3 நாள்களில் தபால்காரா்கள் மூலம் வீடுகளுக்கு வந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com