மதுரை அரசுப்பள்ளி மாணவிகள் 3 போ் பல் மருத்துவப் படிப்புக்கு தோ்வு

மதுரை மாநகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் 3 போ் பல் மருத்துவப் படிப்புக்கு வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை மாநகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் 3 போ் பல் மருத்துவப் படிப்புக்கு வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இதில் முதல் 3 நாள்கள் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மதுரை ஈ.வே.ரா. நாகம்மையாா் மாநகராட்சி பெண்கள் பள்ளியைச் சோ்ந்த ஆா். சினிரா திருநெல்வேலி ராஜாஸ் பல் மருத்துவக்கல்லூரி, அதே பள்ளியைச் சோ்ந்த எஸ். நபிலா பா்வீண் சென்னை வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் எழுமலை அரசுப்பள்ளியைச் சோ்ந்த மாணவி எம். கீா்த்திகா திருவள்ளூா் பிரியதா்ஷினி பல் மருத்துவக் கல்லூரிக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் மாநகராட்சி பள்ளி மாணவிகள் இருவருக்கும் மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com