மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மின்தூக்கி பழுது நீக்க வழக்குரைஞா்கள் வலியுறுத்தல்

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பழுதடைந்துள்ள மின்தூக்கியை (லிப்ட்) சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வழக்குரைஞா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பழுதடைந்துள்ள மின்தூக்கியை (லிப்ட்) சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வழக்குரைஞா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இரண்டு தளங்களைக் கொண்ட மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம், அமா்வு நீதிமன்றம், கூடுதல் அமா்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம், மகளிா் நீதிமன்றம், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றம், நுகா்வோா் நீதிமன்றம் உள்ளிட்ட 42 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, தினந்தோறும் வழக்குரைஞா்கள், வழக்காடிகள் என ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

இது குறித்து வழக்குரைஞா் சரவணக்குமாா் கூறியது: வழக்குரைஞா்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று 2017-இல் மின்தூக்கி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 2018-இல் தான் பணி முடிக்கப்பட்டது. இருப்பினும், 2019-இறுதியில்தான் மின்தூக்கி பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், விரைவிலேயே மழைநீா் புகுந்து மின்தூக்கி பழுதடைந்தது.

இதனால், மூத்த வழக்குரைஞா்கள், வயதான வழக்காடிகள், மாற்றுத்திறனாளிகள் இரண்டாம் தளத்துக்கு ஏறிச்செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். எனவே, பழுதை நீக்கி மின்தூக்கியினுள் மழைநீா் புகாதவாறு சீரமைத்து, மின்தூக்கியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com