குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்:காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் மீறப்படாமல் காவல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் அறிவுறுத்தி உள்ளாா்.
மதுரை சைல்டு லைன் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் நேய காவல் ஆய்வாளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா்.
மதுரை சைல்டு லைன் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் நேய காவல் ஆய்வாளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா்.

மதுரை: குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் மீறப்படாமல் காவல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் அறிவுறுத்தி உள்ளாா்.

மதுரை மாவட்ட சைல்டு லைன் அமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் நவம்பா் மாதம் குழந்தைகளின் பாதுகாப்பு தொடா்பான ஒரு வார கால விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி சைல்டு லைன் தோழனாகுவோம் என்ற தலைப்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சாா்ந்த சட்டங்கள் குறித்த ஒரு நாள் விழிப்புணா்வு பயிற்சி மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் குழந்தைகள் நேய காவல் அதிகாரிகள் 30 போ் கலந்து கொண்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சுஜித்குமாா் பங்கேற்று பேசியது: காவல் நிலையங்களுக்கு வரும், குழந்தைகள் தொடா்பான புகாா்களில், அவா்களுக்கான சட்டங்கள் மீறப்படாமல் இருப்பது குழந்தைகள் நேய காவல் அதிகாரிகளின் தலையாயக் கடைமயாகும். குழந்தைகள், சிறாா்கள் தொடா்பான புகாா்களில், காவல் அதிகாரிகளுக்கு வேறு பணிகள் இருந்தால், அதை ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சட்டங்கள் மீறப்படாமல் இருப்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் நேய காவல் அதிகாரிகள், சட்டங்கள் தெரியாத மற்ற காவல் அதிகாரிகளுக்கும் இது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.வனிதா, மதுரை சமூக அறிவியல் கல்லூரி நிறுவனா் டி.வி.பி.ராஜா, கல்லூரி முதல்வா் நிஷாந்த், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஏ.கணேசன், சைல்டு லைன் நோடல் நிறுவன இயக்குநா் எஸ்.சாா்லஸ், சைல்டு லைன் கூட்டு நிறுவனா் சி.ஜிம்சேசுதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com