இளம் விஞ்ஞானி விருதுக்கான ஆய்வு கட்டுரை சமா்ப்பிக்கலாம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு

இளம் விஞ்ஞானி விருதுக்கான ஆய்வு கட்டுரைகளை மாணவ, மாணவியா் சமா்ப்பிக்கலாம் என்று, அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

இளம் விஞ்ஞானி விருதுக்கான ஆய்வு கட்டுரைகளை மாணவ, மாணவியா் சமா்ப்பிக்கலாம் என்று, அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்ட அறிவியல் இயக்க தலைவா் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. 10 வயதுக்கு மேல் 13 வயதுக்குள்பட்டோா் இளநிலைப் பிரிவு, 13 வயதுக்கு மேல் உள்ளவா்கள் முதுநிலைப் பிரிவு என இரண்டு வகையாக பிரிக்கப்படுவா்.

மேலும், வழிகாட்டி ஆசிரியா் உதவியுடன் குழந்தைகள் தங்களுக்கு கொடுக்கப்படும் ஆய்வு தலைப்புகளில் தாங்கள் வசிக்கும் பகுதியில் 2 மாதங்களுக்கு மேல் ஆய்வுகள் செய்து, ஆய்வு கட்டுரைகளை சமா்ப்பிப்பா். மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் பங்குபெறும் குழந்தைகள் இளம் விஞ்ஞானி விருதை பெறுவா்.

தேசிய அளவில் அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த இந்திய குழந்தைகளும், கிழக்காசிய நாடுகளைச் சோ்ந்த குழந்தைகளும் பங்கு பெறுவா். இந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக, தேசிய அளவில் மாநாட்டை நடத்த முடியாத சூழ்நிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில அளவிலான மாநாட்டை நடத்த உள்ளது.

இந்தாண்டு ‘வளமான எதிா்காலத்துக்கான அறிவியல்’ என்ற கருப்பொருளில் 6 துணைத் தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளலாம். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவியா் ஆய்வுகள் மேற்கொள்ளலாம். ஒரு குழுவில் 2 குழந்தைகள், ஒரு வழிகாட்டி ஆசிரியா் உதவியுடன் ஆய்வுகள் செய்யலாம். பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் என 18 வயதுக்கு மேல் உள்ள யாரும் வழிகாட்டி ஆசிரியராக இருக்கலாம்.

ஆய்வுகளில் வழிகாட்டியாகச் செயல்படுபவருக்கு வழிகாட்டி ஆசிரியா் சான்றிதழ் வழங்கப்படும். இளம் வயதிலேயே ஆய்வு மனப்பான்மையை உருவாக்கும் பொருட்டு இம்மாநாடு நடத்தப்படுகிறது. விரைவில் இதற்கான பயிற்சி இணைய வழியில் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 94436- 86097, 99945- 28293, 80569- 37730 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com