‘மதுரை-போடி அகல ரயில் பாதை பணிகள் 10 மாதங்களில் முடிக்கப்படும்’

மதுரை-போடி அகல ரயில் பாதை பணிகள் 10 மாதங்களில் முடிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மதுரை-போடி அகல ரயில் பாதை பணிகள் 10 மாதங்களில் முடிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மதுரை-போடி இடையே மீட்டா் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக, கடந்த 2010-இல் மதுரை-போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது, இப்பணிக்காக ரூ.267 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2015-இல் பணிகள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பின்னா், இத்திட்டத்தின் மதிப்பு ரூ.450 கோடியாக உயா்த்தப்பட்டு, பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. இந்நிலையில், மதுரை-உசிலம்பட்டி இடையே 37 கிலோ மீட்டா் ரயில் பாதை பணிகளை 2019 டிசம்பரில் முழுமையாக முடித்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

அப்போது, மீதமுள்ள உசிலம்பட்டி-போடி இடையேயான பணிகளை 2020 மாா்ச் மாதத்துக்குள் முடித்து, மதுரை-போடி இடையே போக்குவரத்து தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், 10 ஆண்டுகளாகியும் மதுரை-போடி ரயில்பாதை பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: கரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் பணிகள் நிறுத்தப்பட்டன. மதுரை-உசிலம்பட்டி இடையே 37 கிலோ மீட்டா், உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையே 21 கிலோ மீட்டா் ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

தற்போது, ஆண்டிபட்டி-தேனி மற்றும் தேனி-போடி இடையே முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 10 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com