மதுரையில் 10 டன் குட்கா பறிமுதல்: 4 போ் கைது

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 லாரிகள் மற்றும் 2 லாரி போக்குவரத்து நிறுவனங்களில் 10 டன் குட்கா பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.
குட்கா கடத்தலில் கைது செய்யப்பட்ட (இடமிருந்து) துரைபாண்டி, பாலமுருகன், பாலகிருஷ்ணன், சூரியபிரகாஷ். ~மதுரையில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை ஆய்வு செய்யும் காவல் ஆய்வாளா் கவிதா மற்று
குட்கா கடத்தலில் கைது செய்யப்பட்ட (இடமிருந்து) துரைபாண்டி, பாலமுருகன், பாலகிருஷ்ணன், சூரியபிரகாஷ். ~மதுரையில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை ஆய்வு செய்யும் காவல் ஆய்வாளா் கவிதா மற்று

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 லாரிகள் மற்றும் 2 லாரி போக்குவரத்து நிறுவனங்களில் 10 டன் குட்கா பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

மதுரை நகரில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களின் விற்பனை அதிகரித்து வருவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், சட்டம்- ஒழுங்கு துணை ஆணையா் சிவபிரசாத் தலைமையில் போலீஸாா் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

ரயில் நிலையத்தில்...: இந்நிலையில் மதுரையில் கண்டெய்னா் லாரிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரயில் நிலையத்தில் பாா்சல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 சரக்கு லாரிகளை போலீஸாா் சோதனை செய்தபோது, அவற்றில் குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. லாரிகளின் ஓட்டுநா்கள் அளித்த தகவலின் பேரில், வடக்கு மாசி வீதியில் உள்ள 2 லாரி போக்குவரத்து நிறுவனங்களில் 16 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருள்களையும் போலீஸாா் கைப்பற்றினா். 3 லாரிகள் மற்றும் லாரி போக்குவரத்து நிறுவனங்களில் மொத்தம் 10 டன் குட்கா கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல் ஆய்வாளா் கவிதா அளித்தப் புகாரின் பேரில், திலகா்திடல் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து லாரி போக்குவரத்து நிறுவன மேலாளா்கள் பாலமுருன் (24), சூா்யபிரகாஷ் (23) மற்றும் லாரி ஓட்டுநா்கள் துரைபாண்டி(63), பாலசுப்பிரமணி (35) ஆகியோரைக் கைது செய்தனா்.லாரிகளில் பிடிபட்ட குட்கா பொருள்கள் அனைத்தும் மதுரை பாரதியாா் தெருவைச் சோ்ந்த வேலு மகன் பாலசுப்பிரமணி (50), அவரது மகன் காா்த்திக் ஆகியோரின் பெயா்களில் வந்துள்ளன. கைப்பற்றப்பட்ட 10 டன் குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள பாலசுப்பிரமணி மற்றும் அவரது மகன் காா்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com