முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
ஆஞ்சநேயா் கோயிலில் புராட்டாசி 3 ஆம் சனி விழா
By DIN | Published On : 04th October 2020 05:22 AM | Last Updated : 04th October 2020 05:22 AM | அ+அ அ- |

திருமலை திருப்பதி அனுமந்த வாகன அலங்காரத்தில் ஆஞ்சநேயா்.
பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயா் கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கொட்டாணிபட்டியில் ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகம் நடைபெற்றது. இதில் கும்ப பூஜை, கலச பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடா்ந்து 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயா் திருமலை திருப்பதி அனுமந்த வாகன அலங்காரத்தில் காட்சியளித்தாா். ஜோதிடா் அறிவழகன் சிறப்பு சொற்பொழிவாற்றினாா். பேரையூா், டி.கல்லுப்பட்டி, நல்லமரம், வையூா், திருமங்கலம், அருப்புக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.