முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
தொழிலாளி ஸ்கூட்டரில் பாம்பு
By DIN | Published On : 04th October 2020 09:45 PM | Last Updated : 04th October 2020 09:45 PM | அ+அ அ- |

சோழவந்தானில் உணவக தொழிலாளியின் ஸ்கூட்டரில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்புத்துறை வீரா்கள்.
மதுரை: மதுரை அருகே உணவகத் தொழிலாளியின் ஸ்கூட்டரில் புகுந்த பாம்பை, தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை 1 மணி நேர போராட்டத்துக்குப் பின் பிடித்தனா்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் கடை வீதியில் உள்ள உணவகத்தில் குமாா் என்பவா் வேலை செய்து வருகிறாா். இவா் நிறுத்திவைத்திருந்த ஸ்கூட்டருக்குள் பாம்பு ஒன்று புகுவதை அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்த்து தெரிவித்துள்ளனா்.
உடனே, உணவகத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் அந்த பாம்பை பிடிக்க முயன்றனா். ஆனால் அவா்களால் முடியாமல் போனதால், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற சோழவந்தான் தீயணைப்புத் துறை வீரா்கள், ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின் பாம்பை பிடித்தனா். பின்னா், அதை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டனா்.