மேலூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கிடங்கு: முதல்வா் காணொலி மூலம் திறப்பு

மதுரை மாவட்டம், மேலூா் விநாயகபுரத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட தானியங்கி இயந்திரங்கள் வசதியுடன் கூடிய கிடங்கை,
img_20201005_wa0009_0510chn_82_2
img_20201005_wa0009_0510chn_82_2

மேலூா்: மதுரை மாவட்டம், மேலூா் விநாயகபுரத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட தானியங்கி இயந்திரங்கள் வசதியுடன் கூடிய கிடங்கை, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

காணொலி மூலம் தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான், விவசாயி ஆா். நல்லபாகன், மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பொன்னுச்சாமி மற்றும் வேளாண் விற்பனைக் குழு உதவி இயக்குநா் மொ்சி ஜெயராணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனலட்சுமி, கொட்டாம்பட்டி ஒன்றிய அதிமுக செயலா் வெற்றிசெழியன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத காலங்களில் அதை தரம் பிரித்து பாதுகாப்பாக சேமித்து வைக்கவும், விலை உயரும் காலத்தில் விளைபொருள்களை விற்பனை செய்யவும் இந்த கிடங்குகள் மிகவும் உதவியாக இருக்கும். நபாா்டு நிதி உதவியுடன் இத்திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை வேளாண் விற்பனைக் குழுவின் கீழ் இம்மையம் செயல்படும் என, ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com