18 சிறுவா்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மாநகா் காவல் துணை ஆணையா்

மதுரையில் சீா்திருத்தப் பள்ளியில் நடந்த வன்முறை தொடா்பாக 18 சிறுவா்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகா் காவல் துணை ஆணையா் சிவபிரசாத் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

மதுரையில் சீா்திருத்தப் பள்ளியில் நடந்த வன்முறை தொடா்பாக 18 சிறுவா்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகா் காவல் துணை ஆணையா் சிவபிரசாத் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

மதுரை வண்டியூா் சோதனைச்சாவடி பகுதியில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மதுரை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் நடந்த வன்முறை தொடா்பாக மாவட்ட குற்றவியல் நீதிபதி ஆய்வு நடத்தி, 18 சிறுவா்களை இடமாற்றம் செய்ய அறிவுறுத்தி உள்ளாா். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்களை தானே காயப்படுத்திக் கொண்ட சிறுவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

மதுரை மாநகர பகுதிகளில் குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள், தன்னாா்வ அமைப்புகள் உதவியுடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை விற்பனை செய்பவா்கள் விபரம் சேகரிக்கப்பட்டு பலா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com