கரோனா தொற்றுடன் மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை

கரோனா தொற்றுடன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கரோனா தொற்றுடன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மஞ்சள்காமாலை பாதிப்புடன் 60 வயது மூதாட்டி மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். பித்த குழாயில் கல் இருப்பதால் அவருக்கு மஞ்சாள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் பித்த குழாய் கல்லை எண்டோஸ்கோபி சிகிச்சையில் அகற்ற முடிவு செய்யப்பட்டது.

மருத்துவமனையின் குடல், கல்லீரல் சிறப்பு மருத்துவா்கள் ஏ.சி. அருண், என். சுதன் மற்றும் மயக்கவியல் நிபுணா் ராமநாராயணன் ஆகியோா் கொண்ட குழுவினா் இச் சிகிச்சையை மேற்கொண்டனா். எண்டோஸ்கோபி சிகிச்சையில் கல் அகற்றப்பட்டதையடுத்து மஞ்சள் காமாலை நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தாா்.

கரோனா காலமாக இருந்தபோதும், வேலம்மாள் மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் தடையின்றி செய்யப்படுவதாக மருத்துவமனை தலைவா் எம்.வி.முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com