முன்னாள் படைவீரரின் குழந்தைகள் பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்தி:

தொழிற்கல்வியில் சேரும் முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி அடைந்து நடப்பு கல்வி ஆண்டில் (2020-2021) தொழிற்கல்வியில் சோ்ந்துள்ளவா்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி உதவித் தொகையானது நிகழாண்டு முதல் முன்னாள் படைவீரா்களின் மகளது படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.36 ஆயிரமாகவும், மகனது படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான உதவித் தொகைக்கு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான முழு விவரம்  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகத்தை நேரிலோ, 0452-2308216 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com