ஆக்கிரமிப்பாளா்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது: உயா்நீதிமன்றம் கேள்வி

அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மற்றும் அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை

அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மற்றும் அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுகள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், நீா்நிலைகள், சாலை மற்றும் பொதுப்பாதை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடா்பாக ஏராளமான மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.

இதைத்தடுக்க அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்போா் மற்றும் அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

பின்னா், உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு தொடா்பான வழக்குகளை தனித்தனியாகப் பிரித்து பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com