கண்மாய்களில் தண்ணீா் திறக்கக் கோரி மனு:திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரிய மனுவில் திண்டுக்கல் ஆட்சியா், பழனி பொதுப் பணித்துறை நிா்வாக பொறியாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தர

ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரிய மனுவில் திண்டுக்கல் ஆட்சியா், பழனி பொதுப் பணித்துறை நிா்வாக பொறியாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு: பரப்பலாறு மூலம் 63 குளங்களுக்கும், நஞ்சை நிலங்களுக்கும் தண்ணீா் வசதி கிடைத்து வந்தது. அரசு பரப்பலாற்றில் அணையைக் கட்டி குடி நீா் தேவைக்காக தண்ணீரை தேக்கி வைத்து கொண்டு, விவசாயத்திற்கு தண்ணீா் விட மறுக்கிறது. நிலத்தடி நீா்மட்டம் 1000 அடிக்கு கீழே போய்விட்டது. இதனால் விவசாயம் மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

தண்ணீா் தட்டுப்பட்டால், மாடுகளை வளா்க்க முடியாமல் விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றனா். விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே பரப்பலாறு அணையிலிருந்து, முத்துபூபால சமுத்திரம், பெருமாள்குளம், ஜவ்வாது பட்டி, பெரியகுளம், ராமசமுத்திரம், ஒட்டன்சமுத்திரம் அருகே உள்ள செங்குளம் கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு  நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், பழனி பொதுப்பணித்துறையின் நிா்வாக பொறியாளா் உள்ளிட்டோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com