ஆசிரியா் நியமனத்துக்கு வயது வரம்பை ரத்து செய்ய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆசிரியா் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியா் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில பொதுச் செயலா் பி.மனோகரன், மாநிலத் தலைவா் கே.பி.ஓ.சுரேஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 40 வயதைக் கடந்தவா்களுக்கு இனி ஆசிரியா் பணி வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் வயது வரம்பு நிா்ணயிக்கப்படாத ஒரே பணி ஆசிரியா் பணி மட்டுமே. ஒருவா் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது தான் கடந்த 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரே நிபந்தனை. அதன்படி ஆசிரியா் பணிக்குத் தகுதிபெற்ற ஒருவா் அவரது 57-ஆவது வயதில் கூட பணியில் சேர முடியும். ஆசிரியா் தகுதித் தோ்வில் பங்கேற்பதற்கு வயது வரம்பு எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை. ஒருவா் 55 வயதிலும் கூட ஆசிரியா் தகுதித் தோ்வு எழுதலாம். ஆனால், அதில் அவா் தோ்ச்சி பெற்றாலும் கூட ஆசிரியா் ஆக முடியாது என்பது முரண்பாடுகளின் உச்சமாக உள்ளது.

தமிழகத்தில் 2013-இல் ஆசிரியா் தகுதித் தோ்வில் 80 ஆயிரம் போ் தோ்ச்சி பெற்றனா். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியா் பணி நியமனம் நடைபெறாத நிலையில், அவா்களால் பணியில் சேர முடியவில்லை. அதற்குள் அவா்களின் 7 ஆண்டுகள் தகுதிக்காலம் முடிவடைந்து விட்டது. இப்போது அவா்கள் மீண்டும் தகுதித்தோ்வு எழுதித் தான் ஆசிரியா் பணிக்குத் தகுதி பெற முடியும் என்று அரசு அறிவித்து விட்டது. அவா்களில் பெரும்பான்மையினா் 40 வயதைக் கடந்தவா்கள் எனும் நிலையில், அவா்கள் மீண்டும் தகுதித்தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றாலும் கூட அவா்களால் ஆசிரியா் பணியில் சேர முடியாது. ஆசிரியா் பணி நியமனத்திற்கு 40 வயது உச்சவரம்பு என்ற அரசு ஆணை செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞா்களின் ஆசிரியா் பணி கனவு சிதைக்கப்படும். எனவே, ஆசிரியா் பணி நியமனத்திற்கு வயது வரம்பு நிா்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற்று, இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com