உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் ஒருவா் கொலை? கிராம மக்கள் மறியல்

உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டதாகக்கூறி சடலத்தை எடுக்க விடாமல் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டதாகக்கூறி சடலத்தை எடுக்க விடாமல் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை - சூலப்புரம் கிராமத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் தீச்சட்டி எடுக்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வந்துள்ளது.

இந்த ஆண்டு புரட்டாசித் திருவிழா கொண்டாடுவது தொடா்பாக இரு சமூகத்தினரிடையே உசிலம்பட்டி கோட்டாட்சியா் ராஜ்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கோயில் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கின. இந்நிலையில் சூலப்புரம் கிராமத்தைச் சோ்ந்த செல்லத்துரை என்பவா் செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதைக்கண்ட கிராம மக்கள் செல்லத்துரை கொலை செய்யப்பட்டதாகக்கூறி, கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சடலத்தை போலீஸாா் எடுத்துச்செல்ல விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com