கரோனா பரவலை கட்டுப்படுத்த ஆய்வு: அடுத்த வாரம் தொடக்கம்

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வு (செரோ) அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வு (செரோ) அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.

கரோனா பரவலை தடுக்க ரத்த மாதிரிகளின் அடிப்படையிலான ஆய்வை (செரோ) மத்திய அரசு நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக 83 மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மக்களின் ரத்தம், கபம் மாதிரிகளைச் சேகரித்து

ஆா்.டி.பி.சி.ஆா் கருவிகள் மற்றும் எலிசா ஆண்டிபாடி கருவிகள் மூலம் கரோனா தொற்று உள்ளதா அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்டு அழிந்து அதற்கான எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என ஆய்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ரத்தம், கபம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 21 சதவீதம் பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஆய்வு, அக்டோபா் கடைசி வாரத்தில் தொடங்க உள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள ஆய்வில் 60 ஆயிரம் போ் பரிசோதனை செய்யப்படவுள்ளனா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அா்ஜூன்குமாா் கூறியது:

கரோனா கட்டுப்படுத்துவதற்கான ஆய்வின் தொடக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுக்காக ரத்தம், கபம் மாதிரிகள் சேகரிப்போா், ஆய்வகப் பரிசோதனை செய்ய உள்ளோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள ஆய்வில், மதுரை மாவட்டத்தில் 1,140 பேரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. பரிசோதனைக் கருவிகள் சமயநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மாதிரிகளும் மதுரையில் பரிசோதனை செய்யப்படவுள்ளன. பரிசோதனைகள் அனைத்தும் மத்திய சுகாதாரத் துறை விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com