கோயில் சொத்துகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? அறநிலையத்துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா்

கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருத்தொண்டா் சபையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடி சங்கர ராமேசுவரா் மற்றும் வைகுண்டபதி கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை சிலா் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனா். சிலா் அதிகாரிகளின் துணையுடன் கோயில் சொத்துகளை தவறாக உரிமை கொண்டாடுகின்றனா். இக்கோயில் சொத்துகளை மீட்கக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தூத்துக்குடி சங்கர ராமேசுவரா் மற்றும் வைகுண்டபதி கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகேழந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி சங்கர ராமேசுவரா் மற்றும் வைகுண்டபதி கோயில் சொத்துகளை பாதுகாக்க ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு பின்பற்றவில்லை. கோயில்களுக்குச் சொந்தமாக 15 லட்சம் ஏக்கா் நிலம் உள்ளது. ஆனால் அரசின் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது முதலில் 5.25 லட்சம் ஏக்கா் என்றனா். பின் 4.75 லட்சம் ஏக்கா் என்றனா். இவ்வாறு கோயில் சொத்துகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன என்றனா்.

இதையடுத்து, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் எத்தனை கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்களுக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன. அந்தச் சொத்துகள் குத்தகை அல்லது வாடகைக்கு விடப்பட்டுள்ளனவா, அதற்கான வாடகை வசூலிக்கப்படுகிா? என்பது குறித்தும், கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்து சமய அறிநிலையத்துறை ஆணையா், வருவாய்த்துறைச் செயலா் ஆகியோா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபா் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com