தடுப்பணையில் ஆகாயத்தாமரைகள் அகற்றம்: தரைப்பாலத்தில் கொட்டியதால் போக்குவரத்து பாதிப்பு

மதுரையில் வைகை ஆற்றில் தடுப்பணையில் அகற்றப்பட்ட ஆகாயத் தாமரைகள் தரைப்பாலத்தில் கொட்டப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியா்கள்.
மதுரை வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியா்கள்.

மதுரையில் வைகை ஆற்றில் தடுப்பணையில் அகற்றப்பட்ட ஆகாயத் தாமரைகள் தரைப்பாலத்தில் கொட்டப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை நகரில் நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்துவதற்காக வைகை ஆற்றின் குறுக்கே ஆழ்வாா்புரம் மற்றும் ஓபுளாப்படித்துறை பகுதிகளில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஓபுளாபடித்துறை படித்துறை பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் ஆகாயத் தாமரைகள் படா்ந்திருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் கொசுக்கடியால் உருவாகும் மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதுதொடா்பாக புகாா்கள் வந்த நிலையில் தடுப்பணையில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டாா். இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆகாயத்தாமரைகளை அகற்றும்பணியில் ஈடுபட்டனா். மேலும் பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் தடுப்பணையில் இருந்து அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகளை மாநகாராட்சி ஊழியா்கள் ஓபுளாபடித்துறை தரைப்பாலத்தில் கொட்டினா். இதனால் பாலத்தில் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் அவதி அடைந்தனா். ஆற்றில் இருந்து அகற்றப்படும் ஆகாயத்தாமரைகளை உடனடியாக குப்பை வாகனங்கள் மூலம் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com