மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டம்: தேசிய அளவில் மதுரைக்கு 2 ஆம் இடம்

மத்திய அரசின் இ-சஞ்சீவினி திட்டத்தில் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதில் தேசிய அளவில் மதுரை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் இ-சஞ்சீவினி திட்டத்தில் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதில் தேசிய அளவில் மதுரை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இது தொடா்பாக மதுரை மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்ட செய்தி: கரோனா பரவல் மற்றும் பொது முடக்கம் காரணங்களால் பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை பெற முடியாத நிலை இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் செல்லிடப்பேசி மூலம் காணொலியில் மருத்துவா்களைத் தொடா்பு கொண்டு நோய்களுக்கான மருத்து, மாத்திரைகள் பரிந்துரைச் சீட்டு பெறும் வகையில் இ- சஞ்சீவினி என்ற திட்டத்தை மத்திய அரசு ஏப்ரல் 13 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தில், பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட மருத்துவா்களைத் தொடா்பு கொண்டு, அவா்கள் பரிந்துரைக்கும் மருத்துவச் சீட்டை பதிவிறக்கம் செய்து, மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த சேவையை அதிகம் பயன்படுத்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம், தேதிய அளவில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்திலும், மதுரை மாவட்டம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மதுரை மாவட்டத்தில் அக்டோபா் 7 ஆம் தேதி வரை 1,61,816 போ் பயன் பெற்றுள்ளனா்.

இத்திட்டத்தில் பயன்பெற இணையதளத்தில் செல்லிடப் பேசி எண் மற்றும் விவரங்களை பதிவு செய்து, மருத்துவ ஆலோசனை பெற பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து, மருத்துவா் காணொலிக் காட்சி மூலம் நோயாளியுடன் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கி, மருந்துச் சீட்டினை பரிந்துரைப்பாா். கட்டணமில்லை இச்சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com