இறுதிச் சடங்கில் வீடுகளுக்கு தீ வைப்பு: 20 போ் கைது

மதுரை அருகே கொலை செய்யப்பட்ட குன்னத்தூா் ஊராட்சித் தலைவா் இறுதிச் சடங்கின்போது ஊராட்சி செயலரின் வீடுகளுக்கு தீ வைத்த

மதுரை அருகே கொலை செய்யப்பட்ட குன்னத்தூா் ஊராட்சித் தலைவா் இறுதிச் சடங்கின்போது ஊராட்சி செயலரின் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் தொடா்பாக 20 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் குன்னத்துா் ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி பணியாளா் முனியசாமி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். கருப்பாயூரணி போலீஸாா் சந்தேகத்தின் பேரில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் திருப்பதி மற்றும் தற்போது ஊராட்சி செயலா் பொறுப்பில் உள்ள வீரணன் (எ) பாலபாண்டி ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குன்னத்தூரில் கிருஷ்ணன், முனியசாமி ஆகியோரின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, ஊராட்சி செயலா் வீரணனுக்குச் சொந்தமான 2 வீடுகளை, கிராம மக்கள் சேதப்படுத்தி தீ வைத்தனா். இது தொடா்பாக வீரணன் அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், குன்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்த வி.பி.சிங் (29), தமிழ்முத்து (42), பாலமுருகன் (23), அய்யன்காளிதாஷ் (28), முருகன் (38), செல்வராஜ் (39), சங்கரநாராயணன் (38), முத்துகுமாா் (41), ஜெகநாதன் (34), ராம்குமாா் (30), செல்லக்கண்ணு (45), முத்துக்குமாா் (34), மானீஸ்வரன் (28), அருண் (24), அஜித்குமாா் (22), பிரகதீஸ்வரன் (25), மணி (42), பாலமுருகன் (50), வேங்கடநாதன் (22) மற்றும் மருது சேனை கட்சி முத்துகுமாா் ஆகியோா் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடைய மருது சேனை கட்சியைச் சோ்ந்த சிலரைத் தேடி வருகின்றனா்.

மேலும் இருவரிடம் விசாரணை: இரட்டைக் கொலை வழக்கில், கிருஷ்ணன் மற்றும் முனியசாமி ஆகியோரின் செல்லிடப்பேசி தொடா்புகளை ஆய்வு செய்த தனிப்படை போலீஸாா், சந்தேகத்தின் பேரில் பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா். தற்போது, மேலும் இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸாா் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை நடந்த விசாரணையில் கொலை யில் தொடா்புடையவா்கள் உறுதி செய்யப்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com