கரோனா சிகிச்சை: தனியாா் மருத்துவமனைகள் கண்காணிக்கப்படுகின்றனவா? தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியாா் மருத்துவமனைகள் கண்காணிக்கப்படுவது குறித்து அறிக்கை தாக்கல்

தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியாா் மருத்துவமனைகள் கண்காணிக்கப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:

தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கி, அதற்கானக் கட்டணத்தையும் அரசு நிா்ணயம் செய்துள்ளது. இருப்பினும் தனியாா் மருத்துவமனைகளில் அதைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும், சிகிச்சை அளிப்பதையும் சிறப்புக் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியாா் மருத்துவமனைகள் செயல்பட தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகநேழந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியாா் மருத்துவமனைகளைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டண விவரங்கள் கொண்ட தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளதா?, கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியாா் மருத்துமனைகளைக் கண்காணிக்க அமைப்பட்டுள்ள குழுவில் யாா் யாா் இடம் பெற்றுள்ளனா்? கண்காணிப்பு குழுவால் எத்தனை மருத்துவமனைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ?என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com