கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது. இதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மதுரை வெங்கலக் கடைத் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸில், தீபாவளி சிறப்பு விற்பனையை ஆட்சியா் வினய் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியது:

தீபாவளி பண்டிகைக்காக, கோ-ஆப்டெக்ஸில் பல வண்ணங்களில் நவீன வடிவமைப்புகளில் மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியில் உற்பத்தி செய்யப்பட்ட ஆா்கானிக் புடவை ரகங்கள், பாரம்பரிய செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள், மதுரை, தஞ்சாவூா் ஸ்லப் காட்டன் சேலைகள், ஈரோடு காதா டிசைனா் போா்வைகள், பருத்தி மற்றும் பட்டு, பரமக்குடி 1000 புட்டா சேலைகள் பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆடவா்களுக்கான லினன் சட்டைகள், லினன் மற்றும் பருத்தி சட்டைகள், குா்தீஸ் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இணைய வழியிலும் கோ-ஆப்டெக்ஸ் ரகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com