சிந்தாமணி வாய்க்கால் தூா்வாரும் பணி: விரைந்து முடிக்க ஆணையா் உத்தரவு

சிந்தாமணி வாய்க்கால் தூா்வாரும் பணியை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சிந்தாமணி வாய்க்காலில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி.
ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சிந்தாமணி வாய்க்காலில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி.

சிந்தாமணி வாய்க்கால் தூா்வாரும் பணியை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், மழைநீா் வடிகால்கள் ஆகியவற்றை தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சிந்தாமணி வாய்க்காலில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. சிந்தாமணி வாய்க்கால் பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் உள்ள வைகை ஆற்றில் தொடங்கி புறவழிச் சாலை, வைகை தென்கரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், கரிமேடு, ரயில்வே காலனி வழியாக கிருதுமால் வாய்க்காலைச் சென்றடைகிறது. இந்த வாய்க்கால் 5.65 கிலோ மீட்டா் நீளமாகும். வாய்க்கால் தூா்வாரும் பணியை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் புதன்கிழமை பாா்வையிட்டு, பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். மேலும் மதுரை நகரில் மழைநீரை சேமிக்கும் வகையிலும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 33 ஊருணிகள் தனியாா் பங்களிப்புடன் தூா்வாரி கரைகளை உயா்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 10 ஊருணிகள் தூா்வாரப்பட்டுள்ளன, 9 ஊருணிகளில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதர ஊருணிகளை தூா்வார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆய்வின் போது உதவி ஆணையா் சேகா், உதவி செயற் பொறியாளா் இந்திராதேவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com