தமிழகத்தில் 2016 முதல் எத்தனை மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன?அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்ட மதுக் கடைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்ட மதுக் கடைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியச் செயலா் கருப்பையா தாக்கல் செய்த மனு:

அறந்தாங்கியிலிருந்து 30 கிலோ மீட்டா் தூரத்தில் அரசா்குளம் கிராமத்தில் இயங்கி வந்த மதுபானக் கடை பொதுமக்கள் எதிா்ப்பால் மூடப்பட்டது. அந்தக் கடையை அறந்தாங்கி-காரைக்குடி நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடி அருகே திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் பள்ளிகள், கோயில்கள், திருமண மண்டபங்கள் அமைந்துள்ளன. மேலும் இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளது. இங்கு மதுபானக் கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவாா்கள். எனவே மதுபானக் கடையைத் திறக்கத் தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுபான கடையைத் திறக்க இடைக்காலத் தடைவிதித்தனா்.

இதையடுத்து, கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் தமிழகத்தில் 5 ஆண்டுகளில் மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை எத்தனை மதுபானக் கடைகள் மூடப்பட்டன? ஒவ்வொரு ஆண்டும் மதுபானக் கடைகளால் எவ்வளவு வருமானம் வந்தது எனக் கேள்வி எழுப்பினா்.

பின்னா், இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com