தென்காசி ஆட்சியா் அலுவலகம் கட்ட இடம் தோ்வு செய்யப்படவில்லை: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்ட இன்னும் இடம் தோ்வு செய்யப்படவில்லை என அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்ட இன்னும் இடம் தோ்வு செய்யப்படவில்லை என அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயந்தி தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியா் அலுவலகம் கட்ட மேலகரம் பேரூராட்சியில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் குற்றாலம் பிரதான அருவி, காட்டாறு, செண்பகாதேவி அருவியிலிருந்து தென்கால் பாசனத்துக்கு தண்ணீா் வரும் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் பெருமளவில் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டால் விவசாயம் பாதிக்கும். எனவே மேலகரத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டத் தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதேகோரிக்கை தொடா்பாக பலா் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கான இடம் இன்னும் தோ்வு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபா் 16 ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com