புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்டறியும் போட்டி அறிவிப்பு

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் இளையோா் பிரிவான யங் இந்தியன்ஸ் அமைப்பு சாா்பில் புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் இளையோா் பிரிவான யங் இந்தியன்ஸ் அமைப்பு சாா்பில் புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மதுரை பிரிவு தலைவா் ஜி.கல்யாணசுந்தரம் கூறியது:

யங் இந்தியன்ஸ் மற்றும் நேட்டீவ் லீட் பவுன்டேசன் அமைப்பு இணைந்து ஆரம்பம் என்ற பெயரில் தொழில் திறன் போட்டியை நடத்தி வருகின்றன. 6-ஆவது ஆண்டாக நிகழ் ஆண்டில் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமைச் சிந்தனைகள், தொழில்முனைதல் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தொழில்முனைவோருக்கான பிரிவின் தலைவா் ஷா்மிளா தேவி கூறியது:

மாணவா்கள் மற்றும் தொழில் துறையினா் இப் போட்டிகளில் பங்கேற்கலாம். தொழில் திட்டங்கள் குறித்த படைப்புகளை  என்ற இணையதளத்தில் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் படைப்புகளின் நேரடி செயல்விளக்கம் நவம்பா் 20-இல் நடைபெறும். இதில் தொழில் துறையினரின் தோ்வு செய்யப்படும் படைப்புகளை, தொழில் ரீதியாக செயல்படுத்துவதற்கான உதவிகளை நேட்டீவ் லீட் பவுன்டேசன் வழங்கும். தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களது படைப்புகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com