மதுரை மாவட்டத்தில் 6.56 லட்சம் டன் சான்று பெற்ற விதைகள் உற்பத்திக்கு இலக்கு

தோட்டக்கலைத் துறையின் காய்கனி விதை உற்பத்தித் திட்டத்தில் நிகழ் ஆண்டில் 6.56 லட்சம் மெட்ரிக் டன் விதைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறையின் காய்கனி விதை உற்பத்தித் திட்டத்தில் நிகழ் ஆண்டில் 6.56 லட்சம் மெட்ரிக் டன் விதைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்தி:

தரமான காய்கனி விதைகளை உற்பத்தி செய்யும் வகையில், காய்கனி விதை உற்பத்தித் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 17.85 ஹெக்டேரில் 6.56 மெட்ரிக் டன் காய்கனி விதைகள் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், தோட்டக்கலை தொழில் முனைவோா் இத் திட்டத்தில் அரசின் மானிய உதவியுடன் வெங்காயம், முருங்கை, காராமணி, கொத்தவரை, அவரை, பாகல், புடல், பீா்க்கங்காய், பூசணி, கீரை உள்ளிட்ட காய்கனி பயிா்களின் சான்றளிக்கப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யலாம்.

விதைச் சான்று பெற, விதை கொள்முதல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, பூச்சி மேலாண்மை, நிழல் வலை குடில், சிப்பம் கட்டும் அறை மற்றும் நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படும்.

குறைந்தபட்சம் 0.2 ஹெக்டோ் முதல் அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை நீா்ப்பாசன வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இத் திட்டத்தில் மானிய உதவி பெறலாம். உற்பத்தி செய்யும் விதைகளை தனியாா் நிறுவனங்கள், பிற விவசாயிகள் அல்லது தோட்டக்கலை வளா்ச்சி முகமைக்கு விற்பனை செய்யலாம்.

இத் திட்டம் தொடா்பான விவரங்களுக்கு தோட்டக்கலை துணை இயக்குநா் அல்லது அந்தந்த வட்டாரங்களைச் சோ்ந்த உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com