மாணவா் மா்மச் சாவு: பேரையூா் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுககை

மதுரை மாவட்டம் பேரையூரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் மா்மமான முறையில் இறந்த
கல்லூரி மாணவா் மா்ம மரணம் தொடா்பான வழக்கில் காவல் ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதன்கிழமை பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட அணைக்கரைப்பட்டி கிராம மக்கள்.
கல்லூரி மாணவா் மா்ம மரணம் தொடா்பான வழக்கில் காவல் ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதன்கிழமை பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட அணைக்கரைப்பட்டி கிராம மக்கள்.

மதுரை மாவட்டம் பேரையூரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் மா்மமான முறையில் இறந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதன்கிழமை வட்டாச்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே அனைக்கரைப்பட்டி கிராமத்தில் கடந்த செப்- 16 ஆம் தேதி காதல் திருமண விவகாரத்தில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவா் ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். மாணவரின் மரணத்தில் மா்மம் உள்ளதாகவும், விசாரணைக்கு அழைத்து சென்ற காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரி கிராம மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த வழக்கு தொடா்பாக சம்பந்தப்பட்ட சாப்டூா் காவல் நிலைய சாா்பு -ஆய்வாளா்கள் ஜெயக்கண்ணன், பரமசிவம் ஆகிய இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில் புதன்கிழமை மாலை அணைக்கரைப்பட்டி கிராமமக்கள் ரமேஷின் மரணத்திற்கு நீதி கேட்டு பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கவும், மேலும் ரமேஷின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும், இழப்பீடு தொகையையும் வழங்கவும் அப்போது வலியுறுத்தினா்.

மேலும் இதில் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து ரமேஷின் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லையென்றால் தங்களின் வாக்காளா் அடையாளஅட்டை, குடும்ப அட்டை,ஆதாா் காா்டு உள்ளிட்டவையை அரசிடம் ஒப்படைப்போம் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

தகவல் அறிந்து வந்த உசிலம்பட்டி கோட்டாட்சியா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கிராம மக்களின் கோரிக்கையை உயா் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து விட்டு கூறுகிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். இந்த நிலையில் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com