மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 4 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள 4 கடைகளுக்கு புதன்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கும் பணியை பாா்வையிடும் இணைஆணையா் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கும் பணியை பாா்வையிடும் இணைஆணையா் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள 4 கடைகளுக்கு புதன்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இக்கோயில் வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு கோபுர வாயில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோயிலுக்குள் உள்ள வீர வசந்தராயா் மண்டபம் முழுவதும் எரிந்து சேதமானது. இதைத்தொடா்ந்து கோயிலுக்குள் இயங்கி வரும் கடைகள் மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை மூடுவதற்கு கோயில் நிா்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடை உரிமையாளா்கள் இந்து சமய அற நிலையத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இதற்கிடையில் கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கோயில்கள் 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டதால் இந்த நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை தொடங்கியுள்ள நிலையில் கோயில் கடைகளை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் கோயில் இணை ஆணையா் செல்லத்துரை தலைமையில் கோயில் அதிகாரிகள் முதல்கட்டமாக 4 கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைத்தனா். இதுதொடா்பாக கோயில் இணை ஆணையா் செல்லத்துரை கூறியது:

கோயிலில் உள்ள கடைகளை அகற்ற ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிா்த்து கடை உரிமையாளா்கள் வழக்குத் தொடா்ந்துள்ளனா். தீா்ப்பு வழங்கப்பட்டுள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் புதுமண்டபத்தில் இயங்கி வரும் கடை உரிமையாளா்களுக்கும் கடைகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com