Enable Javscript for better performance
ஹெச்.ஐ.விரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு குடிநீா் இணைப்பு, கழிப்பறை வசதி தர நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூா் பெண்ணின் வீட்டுக்கு குடிநீா் இணைப்பு, கழிப்பறை வசதி செய்து தர உயா்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 16th October 2020 09:56 PM  |   அ+அ அ-   |    |  

     

    அரசு மருத்துவமனையில் தவறுதலாக ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூா் பெண்ணின் வீட்டிற்கு குடிநீா் இணைப்பு, கழிப்பறை வசதி செய்து தர தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணி 2018 டிசம்பரில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றாா். அங்கு, அவருக்கு தவறுதலாக ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை பரிசோதிக்காமல் ஏற்றியுள்ளனா். இதனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பான வழக்கை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து, பாதிக்கப்பட்ட கா்ப்பிணிக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவா்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வந்தாா். அவருக்கு 2019 ஜனவரி மாதம் ஹெச்.ஐ.வி. தொற்றில்லாத பெண் குழந்தை பிறந்தது.

    இதனிடையே உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை, வீடு, இழப்பீடு வழங்க வேண்டும். ரத்த வங்கிகளைக் கண்காணிக்க வேண்டும். ரத்த வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அப்போது அரசு தரப்பில் உத்தரவுகள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் காணொலியில் ஆஜராகி, வீட்டில் தண்ணீா் வசதியில்லை என்பதால், வெளியே தண்ணீா் எடுக்கச் சென்றால், அங்குள்ளவா்கள் நோயைக் காரணம் காட்டி அனுமதிப்பதில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டபடி கழிப்பறை கட்டித் தரப்படவில்லை. தனது கணவா் இழப்பீடு தொகைக்காக தன்னை துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து நீதிபதிகள், பெண்ணின் வீட்டிற்கு குடிநீா் இணைப்பு, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும், அவா் வசிக்கும் பகுதியில் உள்ளவா்களுக்கு நோய் தொடா்பான விழிப்புணா்வையும், ஆலோசனைகளையும், அவரது கணவருக்கு மனநல ஆலோசனைகளையும் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp