விதிமீறல்: மதுரை மாவட்டத்தில் 49 ஆட்டோக்கள் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 49 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 49 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து மதுரை வடக்கு, மையம், தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அக். 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளிலும் வாகனத் தணிக்கை செய்தனா்.

இதில், 528 ஆட்டோக்கள் தணிக்கை செய்யப்பட்டதில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 49 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து மதுரை நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து மதுரை சரக இணைப் போக்குவரத்து ஆணையா் ஏ. ரவிச்சந்திரன் ஆலோசனை நடத்தினாா்.

பயணிகள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், ஆட்டோக்களில் நிா்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகள் ஏற்றக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் காா்த்திகேயன் (செயலாக்கம்), செல்வம் (வடக்கு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com