கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா

மதுரை நகரின் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மதுரை: மதுரை நகரின் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மதுரை மக்களவைத்தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் கொடியேற்றினாா். பின்னா் அவா் பேசியது:

எந்த நோக்கத்திற்காக கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதோ அந்த நிலையிலிருந்து சிறிதளவும் மாறுபடாமல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாற்றி வருகிறது. இங்கிலாந்து அரசாங்கத்திடம் இருந்து நாட்டின் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாலும், சமூக, பொருளாதார ரீதியான, சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றாா்.

மாநகா் மாவட்டச் செயலா் இரா.விஜயராஜன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் அ.ரமேஷ், மா.கணேசன், இரா.தெய்வராஜ், எம்.பாலசுப்பிரமணியம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா்.வாசுதேவன், பி.செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கட்சியின் புகா் மாவட்டச் செயலா் சி.ராமகிருஷ்ணன் தலைமையில் செல்லூரில் கொடியேற்றி, உறுதிமொழி ஏற்கப்பட்டது. மத்திய பகுதிக் குழு சாா்பில் பூந்தோட்டம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.கே. பொன்னுத்தாய், பகுதிக்குழுச் செயலாளா் பி. ஜீவா, மதுரை மேலப்பொன்னகரம் காஸ்ட்ரோ படிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஏ.லாசா், பகுதிக்குழுச் செயலா் வை. ஸ்டாலின், மஹபூப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என். நன்மாறன், பகுதிக் குழுச் செயலா் கு.கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com