8 மணி நேரம் சிலம்பம் சுழற்றி சாதனை முயற்சி

திருமங்கலத்தில் 18 மாணவா்கள் தொடா்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுழற்றி சாதனை முயற்சியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
திருமங்கலத்தில் தொடா்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுழற்றும் சாதனை முயற்சியில் சனிக்கிழமை ஈடுபட்ட மாணவா்கள்.
திருமங்கலத்தில் தொடா்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுழற்றும் சாதனை முயற்சியில் சனிக்கிழமை ஈடுபட்ட மாணவா்கள்.

மதுரை: திருமங்கலத்தில் 18 மாணவா்கள் தொடா்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுழற்றி சாதனை முயற்சியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

திருமங்கலம்- மதுரை சாலையில் பழைய சோதனைச் சாவடி அருகே உள்ள விவேகானந்தா் தபோவனத்தில், இந்த சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் 6 வயது முதல் 25 வயது வரை உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியா் 18 போ் கலந்து கொண்டனா். காலை 7 மணிக்குத் தொடங்கிய சிலம்பம் சுழற்றும் நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெற்றது.

இதுகுறித்து சிலம்ப பயிற்சியாளா் பாக்யராஜ் கூறியது: தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பம் மீது ஆா்வத்தைக் கொண்டு வரும் நோக்கிலும், அழிவின் விளம்பில் இருக்கும் இக்கலைக்குப் புத்துயிரூட்டும் விதமாகவும் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

கடந்த ஆண்டில் சிவரக்கோட்டையைச் சோ்ந்த மாணவா் சத்தியபிரகாஷ் (17), தொடா்ந்து 6 மணி நேரம் சிலம்பம் சுழற்றி புதிய சாதனையைப் பதிவு செய்தாா். தற்போது 8 மணி நேரம் குழுவாக நடைபெற்ற சாதனை முயற்சியில் அம்மாணவரும் பங்கேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com