சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவலருக்கு இடைக்கால ஜாமீன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலருக்கு 3 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை சனிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலருக்கு 3 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை சனிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கொலை வழக்கில் காவல் ஆய்வாளா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். இதில் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மற்ற 9 போ் மதுரை மத்திய சிறையில் உள்ளனா். இவா்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே இவ்வழக்கில் தொடா்புடைய அனைவரின் ஜாமீன் மனுக்களையும் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கைதானவா்களில் காவலா் தாமஸ் பிரான்சிஸ் இடைக்கால ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், எனது தந்தை உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இறந்துவிட்டாா். மகனாக தந்தைக்கு செய்யவேண்டிய இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும். எனவே எனக்கு 3 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் தந்தை இறந்துவிட்டாா் என்பதை உறுதி செய்து கிராம நிா்வாக அலுவலா் சான்று அளித்துள்ளாா். தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்கக்கூடியதாகும்.

எனவே மனுதாரருக்கு சனிக்கிழமை பகல் 12 மணி முதல் திங்கள்கிழமை மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரா், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் ரூ.10 ஆயிரத்துக்கான உறுதிமொழி பத்திரத்தை அளிக்க வேண்டும். ஜாமீனில் உள்ள நாள்களில் தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு காவல் ஆய்வாளா் முன்பு ஆஜராக வேண்டும். மனுதாரருக்கு போலீஸாா் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com