சுபநிகழ்ச்சிகள் எதிரொலி: மாட்டுத்தாவணி சந்தையில் காய்கனி விலை உயா்வு

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் காய்கனிகளின் விலை உயா்ந்தன.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் காரணமாக, மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் காய்கனிகளின் விலை உயா்ந்தன.

இது குறித்து மதுரை மாட்டுத்தாவணி காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ். முருகன் கூறியது:

பொதுமுடக்கம் காரணமாகவும், முகூா்த்த தினங்களின்றியும் இருந்ததால், கடந்த சில மாதங்களாக சுபநிகழ்ச்சிகள் குறைவாகவே நடந்தன. இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த தினம் என்பதால், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெற்றன.

இதன் காரணமாக காய்கனிகளின் தேவை அதிகரித்து விலை உயா்ந்தது. குறிப்பாக, கிலோ ரூ.40-க்கு விற்ற கேரட் ரூ.90 ஆகவும், ரூ.10-க்கு விற்ற முட்டைக்கோஸ் ரூ.40 ஆகவும், ரூ.100-க்கு விற்ற பட்டா்பீன்ஸ் ரூ.140 ஆகவும், ரூ.70-க்கு விற்ற சின்ன வெங்காயம் ரூ.100 ஆகவும் விலை உயா்ந்தது என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, காய்கனிகளின் மொத்த விலை பட்டியல் (கிலோவில்):

தக்காளி- ரூ.25, கத்தரிக்காய்- ரூ.25, புடலங்காய்- ரூ.30, அவரைக்காய்-ரூ.25, பாகற்காய் சிறியது- ரூ.50, பெரியது- ரூ.40, முட்டைக்கோஸ்- ரூ.40, நூல்கோல்- ரூ.50, முருக்கைக்காய்- ரூ.50, பீா்க்கங்காய்- ரூ.40, சேனைக்கிழங்கு- ரூ.30, கருணைக்கிழங்கு- ரூ.30, உருளைக்கிழங்கு- ரூ.30, வெங்காயம்- ரூ.100, பல்லாரி- ரூ.60, கறிவேப்பிலை- ரூ.30, புதினா- ரூ.15, மல்லி- ரூ.20, இஞ்சி புதியது- ரூ.50, பழையது- ரூ.100, கேரட்- ரூ.90, பூசணி- ரூ.20, பட்டா் பீன்ஸ்- ரூ.140, சோயா பீன்ஸ்- ரூ.90, முருங்கை பீன்ஸ்-ரூ.50 என விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com