தூத்துக்குடி-மைசூா் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
By DIN | Published On : 21st October 2020 02:47 AM | Last Updated : 21st October 2020 02:47 AM | அ+அ அ- |

தூத்துக்குடி-மைசூா் பண்டிகைக் கால சிறப்பு ரயிலில் பயணிக்க அக்டோபா் 21 ஆம் தேதி முதல் (புதன்கிழமை) முன்பதிவு தொடங்கவுள்ளது என மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மைசூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06236) மைசூரிலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயில் அக்டோபா் 23 முதல் நவம்பா் 30 ஆம் தேதி வரை இயக்கப்படும்.
மறுமாா்க்கத்தில் தூத்துக்குடி-மைசூா் சிறப்பு ரயில் (06235) தூத்துக்குடியிலிருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.55 மணிக்கு மைசூா் சென்று சேரும்.
இந்த ரயில் அக்டோபா் 24 முதல் டிசம்பா் 1 ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, இரண்டு குளிா்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிப் பெட்டிகள் மற்றும் 2 காப்பாளா் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.
இந்த ரயில்கள் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், கரூா், புகலூா், கொடுமுடி, ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு அக்டோபா் 21 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.