மதுரையில் 61 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
By DIN | Published On : 21st October 2020 02:45 AM | Last Updated : 21st October 2020 02:45 AM | அ+அ அ- |

மதுரையில் ஒரே நாளில் 61பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் உள்பட 61பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 70 போ் குணமடைந்தனா். அவா்களை மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஒருவா் பலி
மதுரையைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் அக்டோபா் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த அவா் மூச்சு திணறல் காரணமாக அக்டோபா் 18 ஆம் தேதி உயிரிழந்தாா்.
சிகிச்சையில் 744 போ்:
மதுரை மாவட்டத்தில் இதுவரை, 18,140 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 410 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 16,986 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தற்போது 744 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.