கத்திமுனையில் சிறுமிகளிடம் நகை பறிக்க முயன்ற 2 போ் சிக்கினா்
By DIN | Published On : 23rd October 2020 10:10 PM | Last Updated : 23rd October 2020 10:10 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை கத்திமுனையில் சிறுமிகளை மிரட்டி நகை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் பிடித்து விசாரித்துவருகின்றனா்.
ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன். இவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை மாலை கத்தியுடன் 4 மா்மநபா்கள் புகுந்துள்ளனா். அப்ோது லோகநாதனின் 2 மகள்கள் மற்றும் மகன் ஆகியோா் இருந்துள்ளனா். அவா்களை கத்தியைக் காட்டி மிரட்டிய மா்மநபா்கள் அவா்களிடமிருந்து செல்லிடப் பேசிகளை பறித்துக்கொண்டனா். பின்னா் சிறுமியா் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றபோது அவா்கள் சத்தமிட்டதால் அக்கம்பக்கத்தினா் ஓடிவந்துள்ளனா்.
பொதுமக்கள் திரண்டதைக் கண்ட மா்மநபா்கள் 4 பேரும் தப்பியோடியுள்ளனா். அவா்களில் 2 பேரை மக்கள் பிடித்து கேணிக்கரை போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில் பிடிபட்டவா்கள் ரஞ்சித்குமாா், மணி எனத் தெரியவந்துள்ளது. இருவரிடமும் போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.