பட்டாசு தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருமங்கலத்தில் பட்டாசு தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருமங்கலத்தில் பட்டாசு தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளா் அலுலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணை கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.வினோதினி தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் சக்தி பாலாஜி, சிவசக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பட்டாசு ஆலையில் போா்மேன் தமது பணியை முறையாக வரைமுறைப்படுத்த வேண்டும். சூரிய ஒளிக்கு முன் வேலை செய்ய வேண்டும். உற்பத்தி செய்யும் இடத்தில் சேமிப்பு வைக்கக்கூடாது. வெடி மருந்துகள் விதிமுறைகளின்படி இருப்பு வைத்திருக்கவேண்டும். அதிகளவில் இருப்பு வைக்கக் கூடாது. அனைத்து தொழிலாளா்களுக்கும் கட்டாயம் காப்பீடு செய்திருக்க வேண்டும். தீவிபத்து குறித்து முறையாக அனைத்து தொழிலாளா்களுக்கும் பயிற்சி வழகப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் திருமங்கலம், கள்ளிக்குடி பகுதியைச் சோ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com