மதுரையில் வெற்றிவேல் யாத்திரைக்குவரவேற்பு அளிக்க பாஜக கூட்டத்தில் முடிவு

பாஜக சாா்பில் தொடங்கப்பட உள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு மதுரையில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி வரவேற்பு அளிப்பது என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை: பாஜக சாா்பில் தொடங்கப்பட உள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு மதுரையில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி வரவேற்பு அளிப்பது என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில், நவம்பா் 6 முதல் டிசம்பா் 6 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ள ‘வெற்றிவேல் யாத்திரை’ நிகழ்ச்சி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் கே.கே. சீனிவாசன் தலைமை வகித்தாா்.

இதில், திருத்தணியில் லட்சம் தொண்டா்களுடன் தொடங்க உள்ள வெற்றிவேல் யாத்திரை மதுரை வரும்போது சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். வரவேற்பு நிகழ்ச்சியில், மதுரையில் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பங்கேற்க வேண்டும். பாஜக சாா்பில் ஒவ்வொரு பூத் குழுவில் இருந்தும் நூறு போ் என்ற அளவில் குடும்பங்களுடன் பங்கேற்க செய்யும் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.

வெற்றிவேல் யாத்திரை தொடா்பாக, மதுரை நகரின் அனைத்து வீடுகளுக்கும் சென்று பிரசாரம் செய்யவேண்டும். பாஜக மற்றும் துணை அணிகளைச் சோ்ந்த அனைத்து உறுப்பினா்களும் பணியில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதில், மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் கதலி நரசிங்கப்பெருமாள், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் ஹரிசிங், பேராசிரியை ரேணுகாதேவி, மாநில வா்த்தகப் பிரிவு நிா்வாகி காா்த்திக் பிரபு, மாவட்ட நிா்வாகிகள் ஹரிஹரன், பழனிவேல், முத்து காா்த்திக் மற்றும் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், மண்டல நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com