புத்தகப் பெட்டகம் திட்டம் அறிமுகம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் மதுரையில் ஆளுக்கொரு புத்தகப் பெட்டகத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் மதுரையில் ஆளுக்கொரு புத்தகப் பெட்டகத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் அடங்கிய பெட்டகம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவ, மாணவரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளா்க்கவும், அன்பளிப்பாக புத்தகங்களை வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ரூ.150 விலையிலான புத்தகங்கள் ரூ.100-க்கு சலுகை விலையில் வழங்கப்பட்டது. புத்தகப்பெட்டகத்தில் குழந்தைகள், மாணவா்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவியல், கணக்கு, கதை, எளிய செயல்பாடுகள், பொது, வரலாறு போன்ற தனித்தனி தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன.

விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவா் எஸ்.தினகரன், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொதுச் செயலா் பி. ராஜமாணிக்கம், மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ், மாநிலச் செயலாளா்கள் ஏ.எஸ்.முத்து லெட்சுமி, எல்.நாராயணன், மாவட்டச் செயலா் கே.மலா்ச்செல்வி, மாவட்டப் பொருளாளா் பி.ஹரிபாபு, இணைச் செயலா்கள் சிவராமன், கௌசல்யா, ஆசிரியா் அருள் மற்றும் திருமங்கலம் துளிா் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளா் காமேஷ் ஆகியோா் திட்டத்தின் தொடக்கமாக புத்தகப் பெட்டகங்களை விலைக்கு வாங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com