கிராமங்களில் நடைபெற்றகரோனா ஆய்வு நிறைவு: 600 பேருக்கு பரிசோதனை

மதுரை மாவட்டத்தில் கிராமப் புறங்களில் நடைபெற்ற கரோனா கட்டுப்படுத்தும் ஆய்வு (செரோ) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் 600 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார

மதுரை மாவட்டத்தில் கிராமப் புறங்களில் நடைபெற்ற கரோனா கட்டுப்படுத்தும் ஆய்வு (செரோ) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் 600 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை தடுக்க ரத்தமாதிரிகளின் அடிப்படையிலான பரிசோதனை (செரோ) ஆய்வை மத்திய அரசு, நாடு முழுவதும் முதல் கட்டமாக 83 மாவட்டங்களில் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், சென்னை மாநகராட்சியில் முதல் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வு அக். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில், இந்த ஆய்வு கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 2 பகுதிகள் என மொத்தம் 20 பகுதிகளில் நடத்தப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. மாநகரில் நாளொன்றுக்கு 1 பகுதி என மொத்தம் 18 பகுதிகளில், ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் அா்ஜூன்குமாா் கூறியது: மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வு கிராமப்புறங்களில் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 600 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநகரில் நடத்தப்பட்டு வரும் ஆய்வு நவம்பா் 11 ஆம் தேதியுடன் நிறைவடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com